Jul 30, 2008

Super Star Rajini Leading Mukesh :)

சிவாஜி' மூலம் இந்தியாவையே அதிர வைத்த ரஜினி, தற்போது `குசேலன்' மூலம் இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானியையே பின்னுக்குத் தள்ளிவிட்டாரா? இதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் புதிர்க் கணக்கு.

மெகா பட்ஜெட், பிரமாண்ட மேக்கிங் என `சிவாஜி' மூலம் முதல்முறையாக ஹைஃபையாக களமிறங்கிய ரஜினியின் சம்பளம் இருபது கோடிகளுக்கும் மேல் என முணுமுணுக்கப்பட்டது. இப்படத்திற்காக சுமார் நூறு நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்து நடித்தார் ரஜினி. இதனால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற அந்தஸ்தையும் தன் வசம் வைத்திருக்கும் ரஜினி, தற்போது தன்னுடைய ரிக்கார்டை `குசேலன்' மூலம் அவரே உடைத்திருக்கிறார்.

`குசேலன்' படத்திற்காக ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இருபத்து மூன்று கோடிகள் என்று கிசுகிசுக்கிறார்கள். அதேநேரம் இப்படத்திற்காக ரஜினி கொடுத்த கால்ஷீட் வெறும் பதினைந்து நாட்கள்தான்.

இந்த கால்ஷீட் கணக்கை வைத்துதான் ரஜினி அம்பானியை முந்திவிட்டாரா? என்று ஜாலி கணக்குப் போடுகிறது கோலிவுட். 2007-2008-ம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் தனிநபர் வருமானம் நாற்பத்து நான்கு கோடிகள். அதாவது வருடம் முழுவதும் வேலை செய்தால், ஒரு நாளைய சம்பளம் சுமார் பன்னிரண்டு லட்சம். ரஜினி `குசேலன்' படத்தில் நடித்ததற்கு ஒரு நாளைய சம்பளம் சுமார் ஒரு கோடியே ஐம்பத்து மூன்று லட்சம் என்று கிசுகிசுக்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா கோலிவுட் ஜாலி கணக்கு.

தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் இப்படியொரு ரிக்கார்டுக்கு மறுபக்கம் சில முணுமுணுப்புகளும் கிளம்பியிருக்கின்றன. எழுபத்திரண்டு நாட்களில் சுமார் ஐந்து கோடிகளில் குசேலன் தயாராகி இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. ரஜினியின் வருகை, படத்தில் வெறும் இருபத்தைந்து சதவிகிதம்தான் என்று அவரே சொன்னபிறகும் படத்தின் வியாபாரம் `பெரிய' அறுபத்தைந்தைத் தொட்டுவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கிறது. ``

முன்பெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் இருபது சதவிகிதம் வரை லாபத்தை மட்டும் தயாரிப்பாளர்கள் எடுத்துக்கொண்டு, மற்றவையை விநியோகஸ்தர்களுக்கு விட்டுவிடுவார்கள். இதனால் தயாரிப்பாளர் மட்டுமின்றி எல்லோருக்கும் லாபம் கிடைக்கும். இனிவரும் காலங்களில் இதை ரஜினியும் பின்பற்றினால் இன்னும் நல்லா இருக்கும்'' என்று நம் காதில் ரகசியமாகச் சொன்னார் ஒரு விநியோகஸ்தர்.

ஆனால் ரஜினி என்கிற `மாஸ் அப்பீலிங்' சுனாமியில் எந்த தர்மசங்கடங்களும் காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கையை பொய்த்துப் போகவிடமாட்டார் ரஜினி..

No comments:

Post a Comment