Apr 25, 2009

பாலாய் போன காதல்

ஒரு பார்வை போதுமே
என் பாவம் எல்லாம் தீருமே
ஒரு வார்த்தை போதுமே
என் வாழ்வு கரை ஏறுமே
கண் ஜாடை போதுமே
என் கவலை கரை ஏறுமே

தொடர் கதையாய் தொடரும் என்று நினைத்தேனே
நம் வாழ்வு விடை தெரிய விடுகதையாய் ஆனதே இப்போது

உருகி ஊற்றும் மெழுகு அதன் ஒளியில் தானே அழகு
நெருங்கி வந்த உறவு அது நெருப்பிலிட்ட விறகு
உனை பிரிந்த பிறகு சுருங்கி போனதேன் உலகு 

காதல் திருவோடு.

காதல்
என்பதோர்
மணல்வீடு,

அதனிடம்
ஏந்தாதே
திருவோடு.....

சொந்தம்

ஆதி முதல் அந்தம்
ஆதாயமின்றி வாராது சொந்தம்,

அதனினும் மேலடா
இறுதியில் உடலெறிக்கும் தீப்பந்தம்.....

தமிழ் வாழ்க...

நீ கரையாய்
நான் அலையாய்
நித்தம் நித்தம்
உரசிக் கொள்ளலாம்
நீ காதலாய்
நான் கவிதையாய்
தமிழை
இன்னும் கொஞ்சம்
வாழவைக்கலாம் ...

கல்லூரிக் காதல்....

ரோஜாப்பூ சுடிதார் அணிந்து செல்ல
எங்காவது பார்த்ததுண்டா ?

கூவிச்செல்லும் மைனாக்கள் கூட்டமாய்
கொஞ்சுதமிழ் பேசக் கேட்டதுண்டா ?

மேகக்கூட்டம் தாவனியோடு
திரியக் கண்டதுண்டா ?

தொட்டாச்சினுங்கிகள் பார்வை பட்டே
மலர்ந்ததாய் யாரும் சொன்னதுண்டா ?

பட்டாம்பூச்சிகள் சிறகடிக்காமல் நடந்து
செல்லும் அழகை ரசித்ததுண்டா ?

தேவதைகள் விண்ணிலிருதுதானே பூமிக்கு வரும்
பேருந்திலிருந்து இறங்கி வந்ததுண்டா ?

சுட்டெரிக்கும் வெயிலில் பக்கத்தில் நிலவுடன்
பேசி மகிழ்ந்ததுண்டா ?

அவ்வப்போது கனவுகளாய் வந்துசெல்லும்
என் கல்லூரிக்கால நினைவுகள் !
 

Kudai

Katraaga naan unnai Thodikiren ariyamal pogiraai.
Malaiyaga nanum vilugiren Nanaiyamal pokiraai ..
Kudai meethu Ennaku kobam
Unai thoda vidaamal  Thadukkirathe.....

Kaadhal Viyaathi

Ithu Vaithiyathal Sari seyyappadugira viyathi alla ..
Vaithiyaraiyum vizhi pithunga vaikum kaadhal...

Meyyo Poyyo

Idhu poyyo, meyyo theriyaadhe 
Ival pinnal nenje pogaadhe....

தோழியே உன்னைத் தேடுகின்றேன்...

கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........

என் உயிரெல்லாம்
பூக்கள் மலர
கவிதைகள் எழுதிய
ஜீவன் இன்று
ஜன்னல் வழியே
தூரத்து வானின்
வெள்ளி நிலவிடம்
பேசி மறுமொழி
பேச ஆளில்லாமல்
தனித்து துடிக்கிறதே...

உன் இதயத்தின்
விசும்பல்கள்
என் இதயம்
அறியும்.

என் இதயத்தின்
தவிப்புகளை
உன் இதயம்
அறியும்.

சீதையின் கண்ணீர்
அது இராமாயணம்.
பாஞ்சாலியின் கண்ணீர்
அது மஹாபாரதம்.
நம் கண்ணீர்
இந்த நட்பு.

என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை சுமக்கின்ற
என் மெல்லிய
இதயம் உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்